எங்கள் எதிர்ப்புக்கு சங்கரமட பக்தி என்று பெயர் வை

Posted on ஜூலை 2, 2010

1எழுத்தாளர் சாரு நிவேதிதா, தீவிர ஹிந்து ஆதரவு வலைத்தளமான தமிழ் ஹிந்துவின் கட்டுரையை வரவேற்று சுட்டி கொடுத்திருக்கிறாரே? – பெயர் வெளியிட வேண்டாம்

ஆமாம், இந்த அயோக்கியனைத்தான் பெரியாரிஸ்ட் என்று வர்ணித்து பெரியாரிஸ்ட்டுகளைக் கேவலப்படுத்தியது ஆனந்த விகடன். அது இந்தக் கழிசடைக்குப் பெருமையாக இருக்கலாம், ஆனால் அசல் பெரியாரிஸ்ட்டுகளுக்கு எத்தனை பெரிய கேவலம். பெரியாரிஸ்டுகளைக் கேவலப் படுத்துவது ஆனந்த விகடனுக்குப் புதிதா என்ன?

இந்தக் கழிசடையின் கட்டுரைகளை மேற்கோள் காட்டும் போது இணைப்பு மட்டும் கொடுத்தால் போதாது, அந்தத் தளத்தைப் படம் பிடித்தே போட வேண்டும் என்றும் சொன்னார்கள். நீங்கள் சொன்ன கட்டுரை, படமாகப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.

இப்படி எழுதுகிற சாரு நிவேதிதா, சமூக அமைதிக்காக யாருடன் கைகோத்திருக்கிறார்? கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களைச் சீண்டுவது ஒன்றையே தொழிலாகக் கொண்டிருக்கிற “தமிழ் இந்து” வலைத் தளத்துடன் புதிதாகக் கைகோத்திருக்கிறார்.

சாரு நிவேதிதா நீயா நிகழ்வில் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டதற்காக அந்த நிகழ்வையே தடை செய்ய வேண்டும் என்கிறார். காரணம் அது சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கிறதாம். பார்ப்பணியம் தான் தனிப்பட்ட சிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அதை ஒரு பொதுச் சிக்கலாகக் காட்டித் தப்பித்துக் கொள்ளும். அதே வழிமுறையைப் பின்பற்றியிருக்கிற இந்தக் கழிசடையைப் பார்ப்பணன் என்று அழைப்பதா? அல்லது பெரியாரிஸ்ட் என்று அழைப்பதா?

சாரு நிவேதிதா பெரியாரிஸ்டாக இருந்து பார்ப்பணியம் வளர்க்கும் வரை நாம் சங்கரமடத்தின் பக்தர்களாக இருந்தாவது பார்ப்பணியத்தை எதிர்க்கத்தான் வேண்டும்.

படத்தின் மீது மௌசை அழுத்தினால் பெரிய அளவில் படத்தைப் பார்க்கலாம்.

Advertisements