வெண்டைக்காய் விளக்கெண்ணை வதக்கல்

Posted on ஏப்ரல் 2, 2010

2தலித் தலைவர்களின் சிலைகள் ஏழைகளுக்கு சோறு போடப் போவதில்லை என்று பாபா ராம் தேவ் கூறியிருக்கிறாரே? ராஜாமணி கோவிந்தராசன், பாலவாக்கம்.

“ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்ட இடமில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்” என்று தமிழகத்திலிருந்து ஒரு அதிமேதாவி கேட்டது. ராமர் கோயிலும் ஏழை மக்களுக்குச் சோறு போடது என்பதை அப்போதே தெளிவுபடுத்தி இருக்கலாமே இந்த ராம்தேவ்?

தாழ்த்தப்பட்ட தலைவர்களின் சிலைகள் ஏழைகளுக்குச் சோறு போடாதுதான். சிலைகள் சோறு போடுமா போடாதா என்று பார்த்தால் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல, வேறு எந்த சாதித் தலைவர்களின் சிலைகளும் சோறு போடாதுதான்.

அவ்வளவு எதற்கு? எல்லா கோயில்களிலும் இருக்கிற யானை, குரங்கு, சிங்க, குதிரை, ஆமை, மற்றும் மனித வடிவங்களில் இருக்கிற கடவுளர்களின் சிலைகளும் சோறு போடாதுதான். மாறாக அந்த சிலைகள் தினமும் கொஞ்சம் சோற்றை நைவேத்தயம் என்ற பெயரில் பார்ப்பணர்களுக்கு மட்டும் திண்ணக் கொடுக்கும். அதைப் பார்ப்பணன் தானே திண்பான் அல்லது அதற்கும் ஒரு விலை வைத்து மற்றவர்களுக்கு விற்பான். அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிற சாமியார் ராம்தேவ் இதையெல்லாம் கண்டிப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா?

பார்ப்பணியம் தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தைப் பாராளுமன்ற மைய மண்டபத்திலே நிறுவுவதற்காகக் கூடக் குரல் கொடுக்கும் (உதாரணம்: சாவர்கர்). அதே சமயம் பார்ப்பணியத்துக்காக உழைக்காத, தலித் மக்களின் பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காகவும் சம வாய்ப்புக்களுக்காகவும் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களின் சிலைகளை நிறுவுவதென்றால் “இந்த சிலைகள் யாருக்காவது சோறு போடுமா?” என்று வேதாந்தம் பேசும், வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கின மாதிரி.

Advertisements