சொப்பனஸ்கலிதமும் ஆதி வைத்தியரும்

Posted on மார்ச் 15, 2010

3உங்களுக்கு இறை நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் வேறு விஷயம். ஆனால் இறை நம்பிக்கையின் பேரால் கட்டப்பட்ட கோயில்களால்தான் சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் சிறப்படைந்தன. இதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா? ம. பழனிவேல், தஞ்சாவூர்

பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டதால் தான் சிற்பக் கலையும் கட்டிடக் கலையும் வளர்ந்ததுனு சொல்றீங்க. அப்படிப் பாத்தா கல்லணை என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடக் கலை அதிசயம். அது என்ன இறை நம்பிக்கையின் பேரால் கட்டப்பட்டதா? ஆனால் கல்லணையை விட காலத்தால் பிந்தைய தஞ்சைப் பெரிய கோயில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட “உலகப் பண்பாட்டுச் சின்னம்” என்று பட்டயம் எழுதி மாட்டி வைத்திருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தோடு தொடர்புடைய கல்லணை அல்லவா உண்மையான பண்பாட்டுச் சின்னமாக இருந்திருக்க வேண்டும்?

இறை நம்பிக்கையின் பேரால் கட்டப்பட்டது தான் தஞ்சைப் பெரிய கோயில். அதனால் சமூகத்துக்கு விளைந்த பயன் என்ன? அதைக் கட்டுறதுக்காக குடும்பத்த விட்டுட்டு வந்து பொண்டாட்டிய விட்டுட்டு வந்து ஏராளமான சிற்பிங்க வேலை செய்தாங்க. அவங்கள சந்தோஷப்படுத்த ஏராளமான பொம்பளைகள தேவிடியாளாக்குனான் ராஜராஜன். சிற்பிங்களுக்கு சொப்பனஸ்கலிதமாகம இருக்கறதுக்காக கணக்கில்லாத பொம்பளைகள தேவிடியாளாக்குனான். அவுங்களுக்கு தேவரடியார்னு பேராம். சாணிக்கு சந்தனம் பூசுற வேலை இல்லையா இது?

சிற்ப, கட்டிடக் கலைகளின் மகோன்னதம் என்று போற்றப் படுகிற பெரிய கோயில், வருணாசிரமத்தையும் தேவதாசி முறையையும் தான் வளர்த்தது. இந்த வரலாறு பெரிய கோயிலுக்கு மட்டுமல்ல, கட்டிடக் கலை அதிசயம், சிற்பக் கலை அதிசயம் என்று போற்றப்படுகிற ஒவ்வொரு கோயில்களுக்குப் பின்னாலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான எவ்வளவோ அநீதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போ சொல்லு இதை எப்படி நான் ஒத்துக்கறது?

Advertisements