சிம்ம சொப்பனம்

Posted on மார்ச் 10, 2010

0சிம்ம சொப்பனம், சிம்ம சொப்பனம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? ஒரு உதாரணத்தோடு விளக்குவீர்களா?பாண்டியன், கோலார் தங்க வயல்

நல்லாத் தூங்கிக்கிட்டிருக்க ஒரு யானையோட கனவுல திடீர்னு சிங்கம் வந்துச்சுன்னா, அது கனவுங்கறதைக் கூட உணராம அந்த யானை பதறியடிச்சு பிளிறும் பாருங்க, அதுக்குப் பேருதான் சிம்ம சொப்பனம்.

அது என்னன்னு கேட்டதோட விட்டிருந்தா என் வேலை எளிமையா முடிஞ்சிருக்கும். ஒரு உதாரணம் வேற கேட்டுட்டீங்க. சொல்றேன்.

நாப்பது வருஷம் முன்னாடி செத்துப் போன பெரியாரைப் பத்தி நெனைக்கும் போதெல்லாம், நேத்துப் பொறந்த பாப்பானுக்குக் கூட ஒரு நடுக்கம் வருது பாருங்க, அதுக்குப் பேருதான் சிம்ம சொப்பனம். கெட்ட கனவு கண்டு கண் முழிச்சா செல பேரு தண்ணி குடிச்சிட்டுப் படுப்பாங்க, இன்னும் செல பேரு தலைமாட்டுல செருப்பு தொடப்பம் இதெல்லாம் வச்சுக்குவாங்க, நெத்தீல சாம்பல அள்ளிப் பூசிக்குவாங்க. இப்படி எதையாவது செஞ்சா அந்த பயம் போயிடும்னு அவுங்களா ஒரு மூட நம்பிக்கை வச்சிருக்காங்க.

இந்த மாதிரி ஒரு வேலைதான் நித்திப் பயலையும் பெரியாரையும் ஒப்பிடுறது. நித்திப் பய கிட்டயும் பார்ப்பணியம் இருக்குடான்னா, அவந்தான் பாப்பான் கிடையாதே, இங்கே எதுக்கு பார்ப்பணியத்தக் கொண்டு வற்றேங்கறான். இதக் கேட்ட ஒடனேதான் நித்திய ஏண்டா பெரியாரோட ஒப்பிடுறாங்கறது புரியுது.

இருள்நீக்கி அலையஸ் ஜெயந்திரன் கூட ஒரு சின்ன வயசு டிவி தொகுப்பாளியோட சல்லாபிச்சதா ஊரெல்லாம் நாறுச்சு. ஆனா அவனை பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவன் பாப்பான். கோயில் கருவரையிலேயே கில்மா வேலை பாத்த தேவநாதனையும் பெரியாரோட ஒப்பிடல, ஏன்னா அவனும் பாப்பான். அதனால தான், பெரியார்ங்கற சிங்கத்த சொப்பனத்தில கண்டுட்டு, இது மாதிரி, தண்ணி குடிக்கிற, சாம்பல் பூசிக்கிற, தலைமாட்டுல செருப்பு வைச்சுக்குற முட்டாள் வேலையெல்லாம் செய்யிறானுங்க.

உதாரணம் போதுமா பாண்டியன்?

Advertisements