நித்தியின் பிடரியைப் பிடித்தாயே, பெரியாரின் தாடியைப் பிடித்தாயா?

Posted on மார்ச் 9, 2010

6நித்தியானந்தரின் போதனைக்கும் நடத்தைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது தானே உங்களது வாதம். இளவயதுப் பெண்களை முதியவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று போதித்த பெரியார் தன் வயதில் சரி பாதிக்கும் குறைவான மணியம்மையாரைத் திருமணம் செய்ததும் நித்தியானந்தர் செய்ததும் ஒன்று தானே? ஆறுமுகம், பழவந்தாங்கல்

இப்படிக் கேள்வி கேக்கறதோட உளவியல், “நான் ஆதரிக்கிற அல்லது விரும்புற ஒன்னை நீ குறை சொல்லுறே. இப்பப் பாரு, உன் சங்கதி ஒன்னை நான் எடுத்து விடுறேன்” என்று அற்ப சந்தோஷம் காணுறதுதான். ஏண்டா நீ இப்படிப் பண்ணேன்னு நான் கேட்ட கேள்வியை வாய் வழியா முழுங்கி ஆய் வழியா டிஸ்போஸ் பண்றது ஒன்னுதான் இது போன்ற கேள்விகளின் குறிக்கோள்.

சரி, உங்க கேள்விக்கே வற்றேன். பெரியாரும் நித்தியானந்தனைப் போலவே போதிச்சதுக்கு மாறாத்தான் நடந்துக்கிட்டார்னு சொல்றே. ஆமாம் அப்படித்தான் நடந்துக்கிட்டார். இல்லைன்னு சொன்னா இது பெரியாரின் பேரால் பின்பற்றப்படுகிற பார்ப்பணியமாகிவிடும்.

இன்னைக்கு நித்தியானந்தனுக்கு வக்காலத்து வாங்குற ஒவ்வொருத்தனும் சொல்றது, அவன் அந்தப் பொண்ணோட சம்மதத்தோடதான் அவளைத் தொட்டாங்கறதுதான். அதே மாதிரிதான் பெரியார் மணியம்மையாரோட இஷ்டத்துக்கு விரோதமா எதையும் பண்ணிடலை. சம்மதத்தோடதான் மணந்தார். நல்லா கவனிக்கனும் மணந்தார். தனக்கு விருப்பமான முறையில கலியாணந்தான் பண்ணிக்கிட்டாரு. ரகசியமாக் கொண்டு போய் நித்தியானந்தன் பண்ணுன வேலை எதையும் பண்ணிடல.

தன்னுடைய கொள்கைக்கு விரோதமா இருந்தாலும் தன்னுடைய செயலை மறைக்கவில்லை. வெளிப்படையாகத்தான் திருமணம் செய்து கொண்டார். இன்னிக்கு சட்ட விரோதமா எதுவும் பண்ணலைன்னு சொல்ற நித்தியானந்தனால பெரியார் மாதிரி வெளிப்படையா இருக்க முடியலையே? பார்ப்பணர்கள் எதைத் திருமணத்தின் நோக்கமாகக் [இன-விருத்தி/உடலுறவு] கற்பித்தனரோ அதை மணியம்மையாரை மணந்த பிறகும் நிராகரித்தவர் பெரியார். பார்ப்பனர்களால் எது திருமணத்திற்கு நோக்கமாகக் கற்பிக்கப்பட்டதோ அதற்காகத் திருமணத்தையே நிராகரித்தவன் நித்தியானந்தன். இப்போ சொல்லுங்க ரெண்டு பேரும் ஒன்னா?

சில முக்கால் வழுக்கை மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வளவுதான் சுய-இன்பம் செய்தாலும் நித்தியானந்தனை சாரு நிவேதிதாவாகக் கட்டமைக்க முடியுமே தவிர ஈ.வெ.ரா.வாகக் கட்டமைக்க முடியாது.

Advertisements