பாவம், அவனும் ஆம்பிளை தானே…

Posted on மார்ச் 6, 2010

2நித்தியானந்த பரமஹம்சரைப் பற்றி நீங்கள் ஏன் எதுவும் எழுதவில்லை. அவரும் ஒரு ஆம்பளை தானே… 33 வயது இளைஞருக்கு இருக்க வேண்டிய நியாயமான இச்சைகள் அவருக்கும் இருக்கும் தானே. அந்தப் படக் காட்சியில் நடிகையின் முழு சம்மதத்துடன் தானே அவளைத் தொட்டார்! – ப. சிங்காரம், திருவிடைமருதூர்

ஆமாம். நித்தியானந்தன் ஒரு ஆம்பிளைதான் [என்னால பரமஹம்சன்னு எல்லாம் சொல்ல முடியாது. வேணுமானா “ராஜசேகரன்”ன்னு அவன் பழைய பேரச் சொல்றேன்]. அவனுக்கு 33 வயசுன்னு சொல்றே, நியாயமான இச்சைன்னு வேற சொல்றே. அதே முப்பத்து மூணு வயசுக்கு மேலயும் வாழ்க்கைத் துணை அமையாத எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறாங்க. நித்தியானந்தனுக்கு இருந்த அதே நியாயமான இச்சை அவர்களுக்கும் இருக்குமில்லையா? அந்த இச்சையைத் தணிக்க யாரை அனுப்பி வைக்கப் போறே. உன் குடும்பத்தைச் சேர்ந்த பொம்பளைகளையா அல்லது பக்கத்து வீட்டு எதிர்வீட்டுப் பொம்பளைகளையா?

படக் காட்சியில் அவளை முழு சம்மதத்துடன் தான் தொட்டாங்கறே. உன் கண்ணுக்கு இது தெரிஞ்சுது, என் கண்ணுக்கு வேற ஒன்னு தெரிஞ்சுது. உரையெல்லாம் கையால தொட்டே குணப்படுத்துனவன் விந்து முந்துறதைத் தடுக்கு மாத்திரை போட்டுக்கிட்டானே, அதுதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது.

மத்திய அரசு நிதி நிலை அரசு தாக்கல் பண்ணிருக்கு. பெட்ரோல் விலைய ஏத்திருக்கு. இதுனால நமக்கு சாதகம் என்ன பாதகம் என்னன்னு ஒரு சாமானியன் யோசிக்காம இருக்க என்ன பண்ணனுமோ அதைத்தான் பண்ணிருக்கு சன் டிவி. இது புரியாம நீ ஏண்டா நித்தியப் பத்தி பதிவு எழுதலைன்னு என் கிட்ட கேக்குறே. அய்யோ அய்யோ…

Advertisements